Wednesday, August 13, 2008

நினைவுகளின் பயணம் ....

* மலைச்சரிவின் நீண்டதொரு பாதையில் ....
எதிர்பாராது எதிர்கொள்ளும்
தோழியுடன்...
இயல்பானதாய் ஓர் அரட்டையுடன் ..
சாரல் ரசித்து
நடைமேடைக் கடையின்
தேநீர் ருசிக்கும் தருணங்களில்......

*கருத்து வேறுபாடுகளின்
விளக்கங்களும் ...
விவாதங்களின் இறுதியில்
எதிர்ப்புகளும் ..மன்னிப்புகளும் முடிந்து
இருதுளியுடன்
இதழ்கடை புன்னகையுடன்
கைகுலுக்கி கொள்ளும் கணங்களில் .......

* திடீரென கிடைத்துவிடும்
பரிசுப்பெட்டகம்...
உள்ளிருக்கும் பரிசுப்பொருள்
யாதெனச் சிந்திக்க தோன்றாமல் .....
இத்தோழமை நீடிக்க
கண்மூடிப் பிரார்த்திக்கும் வேளைகளில்......

* இவ்வாறான சில நிமிடங்களில்
பல வருடகால நட்பு முழுமையாய்
வாழ்ந்து விட்டதாக அனுபவம் ......

hi friends...

hi to all...

i'm back again..

after the hollydays..

with the kavidais as usual....